1:02 PM -
கவிதைகள்
No comments
கவிதைகள்
No comments
பாதைகள் !
ஒரு இலக்கை நோக்கி,
சில நாட்கள் தொடர்ந்து பயணம் செய்ய நேரிடுகையில்..
முதல்
நாளிலேயே,
இலக்கை
எளிதாக இலக்கை
அடைந்துவிட்டாலும்..
பின்வரும்
நாட்களில்,
அதே இலக்கிற்காக வெவ்வேறு
பாதைகளில்
பயணம் செய்யத்துவங்குகிறேன்..
அந்த இலக்கை அடைவதற்கு
மிக எளிதான வழியையும்,
மிகக்கடினமான
வழியையும்,
அறிந்துகொள்ள
விழைகிறேன்..
ஒவ்வொரு
வழியிலும் தோன்றும் இடர்களையும்,
அதை எவ்வாறு கடப்பதென்ற யுக்தியையும்
தெரிந்துகொள்கிறேன்..
ஒருவேளை
இவை
மற்றொருநாள்
எனக்கே உதவியாய்
அமையலாம்...
இல்லையேல்,
இதே இலக்கை அடைய
என்னிடம்
உதவி கேட்பவருக்கு
எளிதாகவும்
உறுதியாகவும்
வழிகாட்டிட
இயலும்...
இவ்வாறே..
வாழ்க்கை என்னை
ஒவ்வொரு தருணத்திலும்
வழிநடத்தி வந்திருக்கிறது…
நேசிக்கப் பழகுவோம் !
0 comments:
Post a Comment